ஆறுபள்ளி கரடு

அமைவிடம் - ஆறுபள்ளி கரடு
ஊர் - ஆறுபள்ளி
வட்டம் - சூளகிரி
மாவட்டம் - கிருஷ்ணகிரி
வகை - கற்திட்டை
கிடைத்த தொல்பொருட்கள் - கற்திட்டை
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

சூளகிரி அருகே ஆறுபள்ளி கிராமத்தில் கரடு ஒன்றின் மீது, சுமார் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல் திட்டை மற்றும் கல் குகை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா ஆறுபள்ளி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் 2,500 ஆண்டுகள் பழமையான கல்திட்டை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சுமார் 6 அடி உயரம் எழுப்பப்பட்டு அதன் மீது, 6 அடி உயரம் உள்ள கற்பலகையை குத்தக்கல்லாக அமைத்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 12 அடி உயரத்தில் கற்திட்டை அமைந்துள்ளது.

ஒளிப்படம்எடுத்தவர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
சுருக்கம் -

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டத்தில் அமைந்துள்ள ஆறுபள்ளி கிராமத்தில் ஆறுபள்ளிகரடு என்னுமிடத்தில் கற்திட்டை காணப்படுகின்றது. இது ஒரு பெருங்கற்கால ஈமச்சின்னமாகும்.